இடங்கொண்டு பெருகுவாய்

 

 

                இடங்கொண்டு பெருகுவாய் -நீ (2)

                வலப்பக்கம் இடப்பக்கம்

                இடங்கொண்டு பெருகுவாய்

               

 

கோலும் தடியுமாய் சென்றானே

பரிவாரங்கள் தந்து பெருகச்செய்தார்

வெறுமையான என்னையுமே (உன்னையுமே)

நிறைவாகவே அவர் பெருகச்செய்வார்

தடைசெய்யாதே தடைசெய்யாதே

கர்த்தர் தரும் ஆசிர்வாதத்தை - இடங்கொண்டு

 

விதவையின் குறைவான எண்ணையையும்

பல பாத்திரங்களாக பெருகச்செய்தார்

உன்தேவையை கண்டு மனதுருகி

ஆசிர்வதித்து அவர் பெருகச்செய்வார்

தடைசெய்யாதே தடைசெய்யாதே

கர்த்தர் தரும் ஆசிர்வாதத்தை - இடங்கொண்டு

 

சிறுவனின் ஐந்து அப்பங்களை

பல ஆயிரங்களாக பெருகச்செய்தார்

உன் கொஞ்சத்தை ஆசிர்வதித்து

விருந்தியாக்கி அவர் பெருகச்செய்வார்

தடைசெய்யாதே தடைசெய்யாதே

கர்த்தர் தரும் ஆசிர்வாதத்தை - இடங்கொண்டு